திங்கள், 7 மார்ச், 2011

திருவட்டாறு தொகுதி, திருவட்டாறு எம்எல்ஏ

நான் இந்த தொகுதியை சேர்ந்தவன் கிடையாது. இருப்பினும் நான் இவரைப் பற்றி நான் தெரிந்த(படித்தத) தகவலை தெரிவிக்க ஆசைபடுகிறேன்.

படித்ததுநன்மாறனைப் போலவே மிக சிம்பிள் திருவட்டாரு எம்எல்ஏ லீமாரோஸ். அவரைத் தேடிச் சென்றபோது ஒரு டீக்கடையில் தனியாக நின்று டீ குடித்துக் கொண்டிருந்தார். யாரும் அவருடன் இல்லை. தனி மனுஷி!

"ஒருமுறை மக்கள் பிரச்சனைக்காக அரசு அலுவலகத்திற்குப் போன போது உள்ளே விட மறுத்துட்டாங்க. எம்எல்ஏன்னா ஆடம்பரமாக பெரிய படையோட வரணும்னு எதிர்பார்க்குறாங்க அதிகாரிங்க. என்னோட அடையாள அட்டையைக் காட்டினதற்கு அப்புறம்தான் உள்ளேயே விட்டாங்க" என்கிறார். இந்தக் காலத்திலும் எம்எல்ஏவுக்கான எந்த அடையாள மும் இல்லாமல் இருப்பவர்.

"எங்க போனாலும் பஸ்தாங்க. பலமுறை எம்எல்ஏன்னு நடத்துனர் கிட்ட சொன்னாக் கூட நம்ப மறுக் கிறாங்க.

சாதாரண குடும்பத்துல இருந்து வந்தவள் நான். ஊர்ல என் அம்மாவும், அப்பாவும் கூலி வேலைக்குப் போறாங்க. இந்த மக்கள் என்னை மாதிரியான ஒரு ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவளை ஏற்றுக் கொண்டாங்க இல்லையா? அவங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும்" என்று சொல்லும் லீமாரோஸ் பணபலம் இல்லாமல் வெற்றி பெற்ற எம்எல்ஏ.

"உங்களுக்கு என்று உள்ள சொத்து என்ன?" என்றால், பெரியதாக சிரித்தவர்... "ஒன்றுமில்ல. 2002ல் இருந்து மூன்று மாசத்துக்கு ஒருமுறை 359 ரூபாய் பிரீமியம் கட்டுற மாதிரி ஒரு எல்ஐசி பாலிசி போட்டேன். அதான் என் சொத்து" என்கிறார்.

கட்சி இவருக்கு சம்பளமாக கொடுப்பது மாதம் 4 ஆயிரம்!

"சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு வரும்போது கூட ரயிலில் இரண்டாம் வகுப்புலதான் வருகிறேன். ஏ.சி. கோச்ல வரலாமே என்று ரயில் பரிசோதனை அதிகாரிகள் கேட்கிறார்கள். எந்த கிளாஸ்ல வந்தா என்ன சார்? எல்லா ரயிலும் சென்னைக்குதானே வருகிறது?" என்று சொல்லும் லீமா ரோஸ், நன்மாறன் மாதிரியான எம்எல் ஏக்களை அடுத்த ஆட்சியில் மக்கள் கௌரவிப்பார்களா?

அன்பர்களே இந்த தொடரில் எம்எல்ஏ வின் செயல்பாடு பற்றி கேட்டிருக்கிறார்கள். இவரின் எளிமையை பற்றி மட்டும் தெரிந்த நான் செயல்பாட்டை அறிய முடியவில்லை. ஆகவே இத்தொகுதியின் மக்கள் இவரின் செயல்பாட்டை தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

எனது பெயர் நவாஸ்.
--------------------------------- ----------------------------------

திருவட்டாறு (சட்டமன்றத் தொகுதி)

திருவட்டாறு, கன்னியாகுமரி மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.2007 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டது.
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு
சட்டமன்ற தேர்தல் ஆண்டுவெற்றி பெற்ற வேட்பாளர்கட்சிவாக்கு விழுக்காடு (%)
2006R. லீமா ரோஸ்மார்க்சிய கம்யூனிச கட்சி51.60
2001J.ஹேம சந்திரன்மார்க்சிய கம்யூனிச கட்சி50.06
1996V.ஆல்பன்திமுக41.23
1991R.நடேசன்இ.தே.கா50.49
1989R.நடேசன்இ.தே.கா45.37
1984J.ஹேம சந்திரன்மார்க்சிய கம்யூனிச கட்சி36.97
1980J.ஹேம சந்திரன்மார்க்சிய கம்யூனிச கட்சி47.71
1977J.ஜேம்ஸ்ஜனதா கட்சி48.82
---------------------- -------------------------------------------------
இவரின் கூற்றுக்கு பதில் தரலாம். பதிலை கருத்துரையாகவோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரி: electionsurvey@thoothuonline.com

மதுரை கிழக்குத் தொகுதி, மதுரை கிழக்கு எம்.எல்.ஏ.

நான் இந்த தொகுதியை சேர்ந்தவன் கிடையாது. இருப்பினும் நான் இவரைப் பற்றி நான் தெரிந்த(படித்தத) தகவலை தெரிவிக்க ஆசைபடுகிறேன்.

படித்தது
இந்த ஆட்சிக்கான சட்டமன்றக் கூட்டத் தொடர் கடந்த பத்தாம் தேதி யோடு முடிவடைந்துவிட்டது. ஐந்து ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்திட்ட தெம்பில் பலர் உற்சாகத்தோடு தொண்டர்கள் புடைசூழ விடுதியில் வலம் வந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு முன் னாலும் குறைந்தது ஐம்பது, அறுபது பேர் ‘தேவ்டு’ காத்து நிற்கிறார்கள்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏவான நன்மாறனின் அறை மட்டும் ஆள் அரவமற்று அமைதியாய் நிற்கிறது. உள்ளே ஒரு உருவம் ஓடியாடி ஏதோ அவசரத்தில் தன் உடைமைகளை ஒரு பையில் எடுத்து அழுத்திக் கொண்டிருந்தது. கூர்ந்து பார்த்தால் நன்மாறன் எம்எல்ஏ.

"எம்எல்ஏவுக்கு 50 ஆயிரம் சம்பளம் தருகிறது அரசாங்கம். அத கட்சிக்கு கொடுத்துடுவேன். கட்சியின் முழு நேர ஊழியர் நான். அதற்காக கட்சி 5500 ரூபாய் சம்பளம் தருகிறது. அதுதான் குடும்ப ஜீவனத்துக்கு ஆதாரம்" என்று எளிமையாய் சிரிக்கிறார்.

நன்மாறனுக்கு இரண்டு மகன்கள், ஒரு பையன் எம்எஸ்சி படித்துவிட்டு வேலைப் பார்க்கிறார். இன்னொருவர் பி.ஏ.பட்டதாரி. மனைவி சண்முக வள்ளி நன்மாறனின் உறவினர் வீட்டுப் பெண்!

"பாட்டி காலத்துல இருந்து ஒரு வீட்ல குடியிருந்தோம். அந்த வீட்ட வாங்கிக்கச் சொல்லி வீட்டு உரிமை யாளர் கேட்டுக்கிட்டார். பத்து வருஷத்துக்கு முன்னாடி வாங்கினது. 184 சதுரடி. சின்னதா ஒரு வீடு, இதுதாங்க நம்ம சொத்து" என்கிறார்.

நன்மாறனின் எளிமை ஊர் அறிந்த விஷயம். தன்னுடைய மகனின் கல்லூரி சேர்ப்புக்காக சென்றபோது, கல்லூரி கேட்ட சின்ன தொகையை தயார் செய்து கொண்டு போவதற்குள், அட்மிஷன் முடிந்துவிட்டது. சிபாரிசு எதுவும் போகாமல் வேறு கல்லூரியில் தன் மகனைச் சேர்த்துவிட்டு விட்டார். யாரும் தன்னை குறை சொல்லிவிடக் கூடாது என்று அச்சப்படும் தன்மாறன் இந்த நன்மாறன்.

அன்பர்களே இந்த தொடரில் எம்எல்ஏ வின் செயல்பாடு பற்றி கேட்டிருக்கிறார்கள். இவரின் எளிமையை பற்றி மட்டும் தெரிந்த நான் செயல்பாட்டை அறிய முடியவில்லை. ஆகவே இத்தொகுதியின் மக்கள் இவரின் செயல்பாட்டை தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

எனது பெயர் நவாஸ்.
---------------------------------- ----------------------------------

மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)

மதுரை-கிழக்கு, மதுரை மாநகரத்தின் ஓர் தொகுதி ஆகும்.
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு
சட்டமன்ற தேர்தல் ஆண்டுவெற்றி பெற்ற வேட்பாளர்கட்சிவாக்கு விழுக்காடு (%)
2006N.நன்மாறன்மார்க்சிய கம்யூனிச கட்சி38.20
2001N.நன்மாறன்மார்க்சிய கம்யூனிச கட்சி43.29
1996V.வேலுசாமிதிமுக46.24
1991O.S.அமர்நாத்அதிமுக64.00
1989S.R.இராதாஅதிமுக48.88
1984கா.காளிமுத்துஅதிமுக51.08
1980N.சங்கரய்யாமார்க்சிய கம்யூனிச கட்சி49.35
1977N.சங்கரய்யாமார்க்சிய கம்யூனிச கட்சி33.45
----------------------------- ---------------------------------
இவரின் கூற்றுக்கு பதில் தரலாம். பதிலை கருத்துரையாகவோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரி: electionsurvey@thoothuonline.com

நாங்குநேரி தொகுதி! நாங்குநேரி எம்.எல்.ஏ.​!

இந்த அருமையானத் தொடரின் வாயிலாக எங்கள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரின் செயல்பாட்டை மக்களுடன் பகிர்ந்துகொள்ள ஒருவாய்ப்பை தந்த பாலைவனத் தூதிற்கு நன்றி.

எனது தொகுதி நெல்லை மாவட்டத்திலுள்ள நாங்குநேரி. எனது தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு.வசந்தகுமார் ஆம் வசந்த்&கோ வின் உரிமையாளரான சாட்சாத் அந்த வசந்தகுமாரே தான். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரான இவர் முதன்முறையாக எங்கள்(நாங்குநேரி) தொகுதியில் தான் வெற்றிப்பெற்றார்.

"அடிப்படையிலேயே பல செல்வங்களுக்கு சொந்தக்காரனும் பல நிறுவனங்களுக்கு அதிபரான நான் எம்.எல் ஏ. பதவியின் மூலம்தான் சம்பாதிக்க வேண்டும் என்பதில்லை" என தன் பிரச்சாரத்தில் தெரிவித்தவர்.
இவருக்காக பல இயங்கங்கள் முழுவீச்சில் பிரச்சாரம் செய்தன. "மக்களுக்கு சேவை செய்வதற்காகவே நான் இப்பொறுப்புக்கு வர நினைக்கிறேன். அவ்வாறு நான் செய்யாவிட்டால் என் சட்டையை பிடித்து இழுத்து கேட்கும் உரிமையை நான் உங்களுக்கு வழங்குகிறேன்" என்று தன் பிரச்சாரத்தின் வாயிலாக முழங்கினார்.

ஆனால் சொன்னபடி நடந்தாரா??? எங்கே தன் சட்டையை பிடித்து இழுத்துவிடுவாரோ என்று பயந்து டெல்லிக்கு சென்று ஒளிந்துக்கொண்டார்.

இவரை காண வேண்டும் என்றால் எம்.எல் ஏ. ஆன பின்பு இவர் மக்களுக்காக!! தொடங்கிய இவரது வசந்த் டிவி-யில் அல்லது வசந்த்&கோ வின் விளம்பரத்தில் மட்டுமே காண முடிந்தது.

இவர் தன் தொகுதி மக்களுக்கு அதிகமாக செய்தது என்னவென்றால் தன் படம் போட்ட காலண்டர் அடித்து கொடுத்ததும் தன் கட்சியின் தலைவி சோனியாவின் பிறந்தநாளுக்கு வழங்கிய காங்கிரஸ் கட்சியின் கரையிட்ட துண்டுமேயாகும்.

நாங்குநேரி தொகுதி மக்களே, நம் தொகுதியில் எங்காவது ஒழுங்கான சாலையை நீங்கள் பார்த்ததுண்டா?

மக்களின் அடிப்படை தேவைகளை இவர் செய்ததுண்டா?
எத்தனை முறை தேர்தலுக்கு பின்பு இவரை நீங்கள் நம் தொகுதியில் பார்திதிருக்கிறீர்கள்?

உங்கள் பகுதிக்கு வந்து அங்கு (நடந்த?) பணிகளை பார்க்கவோ அல்லது நம் குறைகளை கேட்கவோ வந்ததுண்டா?

எங்கள் பகுதிக்கு (பத்மநேரி-கேசவநேரி)  வந்தபோது நாங்கள் வைத்த எங்கள் பகுதியின் நீண்டகால கோரிக்கையான ஆற்றின் கரையை கட்டும் கோரிக்கைக்கு இவர் இதுவரை செவிசாய்க்கவில்லை.

ஆகவே நண்பர்களே! வாக்காளர்களே இவர் இத்தொகுதியில் மீண்டும் போட்டியிட்டாலோ அல்லது வேறு தொகுதியில் போட்டியிட்டாலும் மீண்டும் இதே நிலைமைத்தான்.

அவ்வாறு மீண்டும் அவர் வந்தால் தொகுதி மக்களுக்காக, தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வசந்த் நியூஸ் என்ற பெயரில் ஒரு டி.வி சேனல் தொடங்குவார் மேலும் மக்களுக்கு காங்கிரஸ் கட்சியின் கரை பதித்த துண்டுக்குப் பதிலாக வேஷ்டியோ அல்லது சேலையோ வழங்குவார் என நினைக்கிறேன்.

உஷாரய்யா உஷாரு!!!

Regards
JAR
kesavaneri,padmaneri
---------------------------------------------------------------------------------
நாங்குநேரி, திருநெல்வேலி மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

சட்டமன்ற தேர்தல் ஆண்டுவெற்றி பெற்ற வேட்பாளர்கட்சிவாக்கு விழுக்காடு (%)
2006H.வசந்தகுமார்இ.தே.கா51.76
2001S.மாணிக்கராஜ்அதிமுக51.54
1996S.V.கிருஷ்ணன்இந்திய கம்யூனிச கட்சி40.27
1991V.நடேசன் பால்ராஜ்அதிமுக72.90
1989ஆச்சியூர் M.மணிதிமுக31.87
1984M.ஜான் வின்சென்ட்அதிமுக58.00
1980M.ஜான் வின்சென்ட்அதிமுக52.18
1977M.ஜான் வின்சென்ட்ஜனதா கட்சி27.71

-------------------------------- ------------------------------------
இவரின் கூற்றுக்கு பதில் தரலாம். பதிலை கருத்துரையாகவோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரி: electionsurvey@thoothuonline.com
------------------ ----------------------------
என‌து பெய‌ர் முக‌ம்ம‌து முகைதீன்,
ஊர் ஏர்வாடி,
நாங்குநேரி ச‌ட்ட‌ம‌ன்ற‌ தொகுதி,
எம்.எல்.எ.திரு.வ‌ச‌ந்த‌குமார்

மின்வெட்டு
ஏர்வாடியில் மின்வெட்டா? பொய் என்று தான் ப‌ல‌ பேர்க‌ள் சொல்ல‌லாம்.
நேற்று வ‌ரை தின‌மும் ப‌க‌ல் 12.00 முத‌ல் 6.00 ம‌ணி வ‌ரை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டு வ‌ந்த‌ மும்முனை மின்சார‌ம் நேற்று முத‌ல் ப‌க‌ல் 12.00 முத‌ல் 3.00 வ‌ரை ம‌ட்டுமே வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌ உள்ள‌தாக‌ மின்சார‌ வாரிய‌ அதிகாரியால் தெரிவிக்க‌ப்ப‌ட்டு அமுல் ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து.

வ‌ழ‌க்க‌மாக‌ காலை 6.00 முத‌ல் 8.00 ம‌ணி வ‌ரை செல்லும் மின்சார‌ம் இன்று 09/03/2011 காலை 9.00 ம‌ணிக்கு தான் வ‌ந்த‌து. ஆனால் ந‌ம்முடைய‌ அருகாமை ம‌ற்ற‌ ஊர்க‌ளில் ஏர்வாடியை போன்ற‌ நிலை கிடையாது.
இத‌ன் விளைவு ந‌ம‌தூரில் செய‌ல்ப‌ட்டு வ‌ரும் ஓரிரு தொழிற் கூட‌ங்க‌ளும் வேறு இட‌ங்க‌ளுக்கு செல்ல‌ உள்ள‌ன‌ என்ப‌தை இங்கு வ‌ருத்தோடு தெரிவித்து கொள்கிறேன்.

இத‌ற்கு யார் கார‌ண‌ம்? மின்சார‌ வாரிய‌ அதிகாரிக‌ளா? அல்ல‌து ந‌ம‌து தொகுதி எம்.எல்.எ. அல்ல‌து எம்.பி யா? அல்ல‌து சிறுபான்மை ச‌மூக‌த்தை அக்க‌றையோடு காத்து வ‌ரும் த‌மிழ‌க‌ அர‌சா? நான் எழுதுவ‌து அத்த‌னையும் பொய்யென‌ ப‌க்க‌த்திலிருப்ப‌வ‌ன் சொல்லுகிறான். அத‌ற்கு அவ‌ன் கூறும் கார‌ண‌ம் மின்சார‌மில்லாத‌ ஊரில் மின்வெட்டு எப்ப‌டி ஏற்ப‌டும்.
------------------------------------- ------------------------- --------------
இவரின் கூற்றுக்கு பதில் தரலாம். பதிலை கருத்துரையாகவோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரி: electionsurvey@thoothuonline.com