நான் இந்த தொகுதியை சேர்ந்தவன் கிடையாது. இருப்பினும் நான் இவரைப் பற்றி நான் தெரிந்த(படித்தத) தகவலை தெரிவிக்க ஆசைபடுகிறேன்.
படித்ததுநன்மாறனைப் போலவே மிக சிம்பிள் திருவட்டாரு எம்எல்ஏ லீமாரோஸ். அவரைத் தேடிச் சென்றபோது ஒரு டீக்கடையில் தனியாக நின்று டீ குடித்துக் கொண்டிருந்தார். யாரும் அவருடன் இல்லை. தனி மனுஷி!
"ஒருமுறை மக்கள் பிரச்சனைக்காக அரசு அலுவலகத்திற்குப் போன போது உள்ளே விட மறுத்துட்டாங்க. எம்எல்ஏன்னா ஆடம்பரமாக பெரிய படையோட வரணும்னு எதிர்பார்க்குறாங்க அதிகாரிங்க. என்னோட அடையாள அட்டையைக் காட்டினதற்கு அப்புறம்தான் உள்ளேயே விட்டாங்க" என்கிறார். இந்தக் காலத்திலும் எம்எல்ஏவுக்கான எந்த அடையாள மும் இல்லாமல் இருப்பவர்.
"எங்க போனாலும் பஸ்தாங்க. பலமுறை எம்எல்ஏன்னு நடத்துனர் கிட்ட சொன்னாக் கூட நம்ப மறுக் கிறாங்க.
சாதாரண குடும்பத்துல இருந்து வந்தவள் நான். ஊர்ல என் அம்மாவும், அப்பாவும் கூலி வேலைக்குப் போறாங்க. இந்த மக்கள் என்னை மாதிரியான ஒரு ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவளை ஏற்றுக் கொண்டாங்க இல்லையா? அவங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும்" என்று சொல்லும் லீமாரோஸ் பணபலம் இல்லாமல் வெற்றி பெற்ற எம்எல்ஏ.
"உங்களுக்கு என்று உள்ள சொத்து என்ன?" என்றால், பெரியதாக சிரித்தவர்... "ஒன்றுமில்ல. 2002ல் இருந்து மூன்று மாசத்துக்கு ஒருமுறை 359 ரூபாய் பிரீமியம் கட்டுற மாதிரி ஒரு எல்ஐசி பாலிசி போட்டேன். அதான் என் சொத்து" என்கிறார்.
கட்சி இவருக்கு சம்பளமாக கொடுப்பது மாதம் 4 ஆயிரம்!
"சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு வரும்போது கூட ரயிலில் இரண்டாம் வகுப்புலதான் வருகிறேன். ஏ.சி. கோச்ல வரலாமே என்று ரயில் பரிசோதனை அதிகாரிகள் கேட்கிறார்கள். எந்த கிளாஸ்ல வந்தா என்ன சார்? எல்லா ரயிலும் சென்னைக்குதானே வருகிறது?" என்று சொல்லும் லீமா ரோஸ், நன்மாறன் மாதிரியான எம்எல் ஏக்களை அடுத்த ஆட்சியில் மக்கள் கௌரவிப்பார்களா?
அன்பர்களே இந்த தொடரில் எம்எல்ஏ வின் செயல்பாடு பற்றி கேட்டிருக்கிறார்கள். இவரின் எளிமையை பற்றி மட்டும் தெரிந்த நான் செயல்பாட்டை அறிய முடியவில்லை. ஆகவே இத்தொகுதியின் மக்கள் இவரின் செயல்பாட்டை தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
அன்பர்களே இந்த தொடரில் எம்எல்ஏ வின் செயல்பாடு பற்றி கேட்டிருக்கிறார்கள். இவரின் எளிமையை பற்றி மட்டும் தெரிந்த நான் செயல்பாட்டை அறிய முடியவில்லை. ஆகவே இத்தொகுதியின் மக்கள் இவரின் செயல்பாட்டை தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
எனது பெயர் நவாஸ்.
--------------------------------- ----------------------------------
திருவட்டாறு (சட்டமன்றத் தொகுதி)
திருவட்டாறு, கன்னியாகுமரி மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.2007 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டது.
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு
---------------------- -------------------------------------------------
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு
சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
2006 | R. லீமா ரோஸ் | மார்க்சிய கம்யூனிச கட்சி | 51.60 |
2001 | J.ஹேம சந்திரன் | மார்க்சிய கம்யூனிச கட்சி | 50.06 |
1996 | V.ஆல்பன் | திமுக | 41.23 |
1991 | R.நடேசன் | இ.தே.கா | 50.49 |
1989 | R.நடேசன் | இ.தே.கா | 45.37 |
1984 | J.ஹேம சந்திரன் | மார்க்சிய கம்யூனிச கட்சி | 36.97 |
1980 | J.ஹேம சந்திரன் | மார்க்சிய கம்யூனிச கட்சி | 47.71 |
1977 | J.ஜேம்ஸ் | ஜனதா கட்சி | 48.82 |
இவரின் கூற்றுக்கு பதில் தரலாம். பதிலை கருத்துரையாகவோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரி: electionsurvey@thoothuonline.com
மின்னஞ்சல் முகவரி: electionsurvey@thoothuonline.com